.

Pages

Wednesday, August 23, 2017

அதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஆக. 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இபிஎம்எஸ் கல்வி நிறுவனத்தின் அங்கமாகிய தாருல் இல்ம் ஸ்கூல் ஆஃப் ஸ்டடீஸ் சார்பில், அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆய்ஷா மகளிர் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஜே. அமீன் நவாஸ்கான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, அம்மாபட்டினம், அன்னை கதிஜா மகளிர் கல்லூரி முதல்வர் எம். சைதா பானு கலந்துகொண்டு 'இன்றைய சமுதாயப் பெண்கள் பொறுப்புணர்வும், விழிப்புணர்வும்' என்ற தலைப்பிலும், எழுத்தாளர் இளையான்குடி ஏ.யாஸ்மின் ஆலிமா, 'பயனற்ற கல்வியும், பாதை மாறிய சமுதாயமும்' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினார்கள்.

இதையொட்டி, சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன. போட்டி முடிவில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, கல்வியக முதல்வர் எம்.ஏ ராபியா நவாஸ் வரவேற்றுப் பேசினார். முடிவில் பள்ளி ஆசிரியை பானு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், பெறோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.