அதிராம்பட்டினம், ஆக.20
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் அவசரகால மருத்துவச் சேவையைப் பாராட்டி இலங்கைத் தமிழர் முகமது அசார், இறந்த உடல் கெடாமல் இருக்க பயன்படுத்தும் குளிரூட்டும் பேழையை நிர்வாகிகளிடம் அன்பளிப்பாக வழங்கினார்.
தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக இச்சேவை தொய்வின்றி நடந்து வருகிறது. மேலும் ஏழை எளியோருக்கு மருத்துவ உதவித்தொகையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சேவையை பாராட்டும் வகையில், லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் முகம்மது அசார், இறந்த உடல் கெடாமல் இருக்க
பயன்படுத்தும் குளிரூட்டும் பேழையை அன்பளிப்பாக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதுகுறித்து தமுமுக நிர்வாகிகள் சாகுல் ஹமீது, தையூப் கூறியது;
அதிராம்பட்டினம் பேரூர் தமுமுகவின் அவசர கால மருத்துவச் சேவையைப் பாராட்டி இறந்த உடல் குளிரூட்டும் பேழையை அன்பளிப்பாக வழங்கிய இலங்கைத் தமிழர் முஹம்மது அசாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் பேழையை, அதிராம்பட்டினம் கடைத்தெருவில் உள்ள தமுமுக அலுவலகத்தில் வைக்க திட்டமிட்டுள்ளோம். இவற்றை அனைத்து சமுதாயத்தவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.