தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலுவலக பணியாளர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்பு செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் இன்று (17.08.2016) வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரிடர் விபத்து மீட்பு பணி செயல்முறை விளக்கத்தில் வெடி விபத்துக்கள் ஏற்படும் பொழுது செய்யப்பட வேண்டிய முதலுதவி, மனித உயிர்களை பாதுகாக்கும் முறைகளும் விளக்கப்பட்டது.
அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்திலிருந்தும், நில அதிர்வுகளில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் அவர்களை காப்பாற்றும் முறையான கயிறு வழி மீட்டல், ஏணி வழி மீட்டல் மற்றும் புகை சூழ்ந்த அறையில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டல் போன்ற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
வாகன விபத்துக்களில் மாட்டிக்கொண்டவர்கள் மற்றும் கட்டிட விபத்துகளில் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளான கட்டர், ஸ்பீரிட்டர், ஏர் லிப்ட்டிங் மற்றும் குடிசை பகுதிகளில் ஏற்படுகின்ற தீ விபத்துகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்படுகின்ற தீ விபத்துகளின் போதும் தீயணைக்கும் முறையினை பற்றி செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்; கணேசன் (கணக்கு), மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேந்திரன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியரக அலுவலக 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.