.

Pages

Wednesday, August 23, 2017

IAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண்ணப்பங்கள் விநியோகம் !

தமிழக அரசால் நடத்தப்பெறும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் 2018-ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணைக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்விற்கு பயிற்சி அளிப்பதற்கு (Preliminary Examination) மாணவ, மாணவியர்களை தெரிவு செய்திட 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவங்கள் தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 20.09.2017 மாலை 5.45 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

தகுதிகள்:
1. மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

2. ஆதிதிராவிடர். பழங்குடியினர். பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர இனத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. குறைந்தபட்ச கல்வித்தகுதியாகிய இளங்கலை பட்டப்படிப்பு ( BA., B.Com, B.Sc., மற்றும் தொழிற்பட்டப்படிப்பான BE, MBBS, B.D.S, B.V.Sc, B.Sc (Agri) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் அனைத்தும்) முடித்தவராக இருத்தல் வேண்டும்.

4. குறைந்தபட்ச வயது அனைத்து வகுபபினருக்கும் - 21

5. அதிகபட்ச வயது இதர வகுப்பினர் - 32

மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பிலிருந்து கீழ்க்கண்டவர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது;
1. ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் - 5 வருடம்

2. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்    - 3 வருடம்

3. மாற்றுத் திறனாளிகள் - 10 வருடம்

விண்ணப்பங்களைப் பெற தகுதியுள்ள மாணவஃமாணவியர்களின் வயது/ பிறந்த நாள் விவரம் (as on 01-08-2018);

SC/SC(A), ST -   Age 21 to  37 years,  31.07.1981-க்கு பின் 31.07.1997 வரை

BC, BC(Muslim), MBC(OBC)  - Age 21 to 35 years,  31.07.1983-க்கு பின் 31.07.1997 வரை

OC - Age 21 - 32 years, 31.07.1986-க்கு பின் 31.07.1997 வரை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் 20.09.2017 மாலை 5.45 மணி வரை. மேற்குறித்த காலக்கெடுவிற்குப் பின் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

எனவே, மேற்குறிப்பிட்ட தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வி, வயது, சாதி மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.