அதிரை நியூஸ்: ஆக. 26
இந்த வருடம் அல்லாஹ்வின் விருந்தினர்களாக வருகை தந்துள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பேருரையின் போது புனித மக்காவிலுள்ள புனிதப்பள்ளிகளின் இமாம் ஷேக் சாலேஹ் ஆல் தாலிப் அவர்கள் பல்வேறு அறவுரைகளை வழங்கினார்.
நேற்றை ஜூம்ஆவில் குழுமியிருந்த சுமார் 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட ஹஜ் யாத்ரீர்களிடம், முஸ்லீம் சமுதாயம் வீண் வாதங்களை தவிர்த்து ஏகன் அல்லாஹ்வை மட்டும் வணங்கி நன்றி செலுத்துவதில் தங்களின் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்றும் புனித ஸ்தலங்களின் புனிதத் தன்மையை பேணுவதிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
முஸ்லீம்கள் பல்வேறு கூறுகளாக பிரிவதும் தங்களுக்கிடையே வேற்றுமைகளை அதிகரிக்கும் காரியங்களில் ஈடுபடுவதும் அறியாமைகால மக்களின் செயலுக்கு ஒப்பனாதாகும். கருத்தொற்றுமையை நோக்கி நகர்வதே முஸ்லீம் சமூகத்தின் தனித்தன்மையாகும். முஸ்லீம்கள் தங்களுக்கிடையே இடையே நிலவும் பிரச்சனைகளை களைந்து விட்டு ஒற்றுமைப்படுவதே இன்றைய காலத்தின் தேவையாகும் எனவும் தனதுரையில் குறிப்பிட்டார்.
முஸ்லீம்கள் விட்டுக்கொடுத்தல் எனும் மன்னிக்கும் குணத்தை கைகொள்வதன் மூலம் தங்களுக்கிடையே அன்பையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், பொறுமையையும், நீதியையும் பேண முடியும். ஹஜ் யாத்ரீகர்கள் தங்களுடைய ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் போது 'ஏகன் அல்லாஹ்விற்கு' மட்டுமே தங்களுடைய வழிபாடுகளை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையின்படி அமைத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து தவறுவது தங்களுடைய உயர் நோக்கமாகிய அல்லாஹ்விற்காக ஹஜ் செய்ய வந்துள்ளோம் என்பதையே சிதைத்துவிடும். எனவே, தவறாக வழிநடத்துபவர்களின் கைகளில் சிக்கி தங்களுடைய நன்மைகளை இழந்துவிட வேண்டாம். எப்போதும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளபடியும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளபடியும் தங்களுடைய வாழ்வையும் வணக்கங்களையும் அமைத்துக் கொண்டு வெற்றி பெறவும் வேண்டுகோள் விடுத்தார்.
அதேவேளை, புனிதமிகு மதினா நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜூம்ஆ குத்பாவின் போது அப்பள்ளியின் இமாம் டாக்டர். ஷேக் அப்துல் பாரி அல் துபைத்தி அவர்களும் தனதுரையில் முஸ்லீம் சமுதாயம் தங்கள் மத்தியில் வேறுபாடுகளை களைந்து கைகொள்ள வேண்டிய ஒற்றுமை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், இரக்க குணம் குறித்தும் வலியுறுத்தி பேசினார்.
மனத்தூய்மை, பக்தியுள்ள நன்னடத்தை, தூய்மையான உடைகள் ஆகியவை உங்களிடையே சகோதரத்துவ உணர்வை மனமாற அதிகரித்து ஹஜ் கிரிகைகளை சிறப்புடன் நிறைவேற்றிட உதவ வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.