அதிராம்பட்டினம், ஆக. 25
மத்திய அரசைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு, கண்டன பரப்புரையில், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகே வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆக.1 முதல் ஆக.25 வரை மக்கள் பரப்புரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இன்று ஆக.25, நிறைவு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகே கண்டன பரப்புரை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமை வகித்தார்.
பரப்புரையில், சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை, திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன் கலந்து கொண்டு பேசுகையில்;
பசுப் பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் என நூற்றுக்கணக்கான குடும்பங்களை பாஜக அரசுகளின் துணையோடு அழித்து விட்டனர். பல அப்பாவிகளை அடித்துக் கொல்வதின் மூலம் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் விளைவே இது எனவும், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்துப் பேசினார்.
முன்னதாக, எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் வரவேற்றார். பரப்புரை முடிவில், எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் முகமது அஜார் நன்றி கூறினார். பரப்புரையில் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு முழக்கமிட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.