அதிரை நியூஸ்: ஆக.16
மதினாவில் பிறந்து வாழும் சுமார் 22 வயது இந்திய இளைஞர் ஒருவர் கடந்த 2 வருடங்களாக சத்தமின்றி செய்துவந்த தன்னலமற்ற சேவை ஒன்று சவுதி அரேபிய மக்களின் மனங்களை வென்று அவருக்கு ஒரு காரையும் பரிசாக பெற்றுத் தந்துள்ளது.
கடந்த 2 வருடங்களாக பெயர் குறிப்பிடப்படாத இந்த இந்திய இளைஞர் வயதான சவுதி பெண்மணி ஒருவரை ஒருமுறை கூட தவறாமல், வாரத்தில் 3 நாட்கள் சிறுநீரக நோய் கூழ்மப் பிரிப்பு மையத்திற்கு (renal hospital's dialysis center) அழைத்துச் சென்று அவருடைய சிகிச்சை நிறைவடையும் வரை காத்திருந்து பின் மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுச் செல்வதை வழமையாக்கிக் கொண்டுள்ளார்.
சிறுநீரக நோய் சிகிச்சை மையத்திற்கு அந்தப் பெண்மணியை அழைத்துச் செல்ல அவரிடம் வாகனம் இல்லாத நிலையிலும் தனது நண்பர்களின் வாகனத்தை இரவலாக பெற்று இச்சேவையை செய்து வந்துள்ளார். இந்த சேவைக்காக அவர் எத்தகைய சம்பளத்தையும் பெற்றதேயில்லை மாறாக அந்த வயதான பெண்மணி இந்த இந்திய இளைஞருக்காக அல்லாஹ்விடம் இருகரமேந்தி ஈருலக வெற்றிக்காக மனமாற துஆ செய்வார்.
அந்தப் பெண்மணிக்கும் இந்த இந்திய இளைஞருக்கும் முதலாளி தொழிலாளி உறவு உட்பட எத்தகைய உறவும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் இந்த பெண்மணியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே 'அல் கஸீம்' நகரில் நல்ல சம்பளத்துடன் கிடைத்த வேலையையும் மறுத்துள்ளார்.
என்னால் அந்தப் பெண்மணியை பிரிந்திருப்பதையும் அவருக்கு சேவை செய்யாமலிருப்பதையும் தன்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என கூறும் அந்த இளைஞரின் வீடியோ கிளிப் ஒன்று அவருக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு அசூர வேகத்தில் பரவி வருவதை தொடர்ந்து அந்த இளைஞருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்க சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் சவுதி அரபிய வர்த்தகர் சவுத் அல் ஹாஜித் என்பவர் முன் வந்துள்ளதுடன் அதை தானே மதினாவுக்கு நேரில் போய் அந்த இளைஞரிடம் அன்பளிப்பாக வழங்குவேன் என்று அறிவித்துள்ளார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.