.

Pages

Sunday, August 27, 2017

இந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உயர்வு !

அதிரை நியூஸ்: ஆக. 27
இந்திய தூதரகம் மற்றும் கவுன்சுலர் மையங்களின் வழியாக இந்தியர் நல நிதி (Indian Community Welfare Fund - ICWF) எனும் பெயரில் சேவை வரி (Levy) வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வருவாயை கொண்டு வெளிநாடுகளில் துன்புறும் இந்தியர்களுக்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இதற்காக இந்திய அரசு எந்தவகை நிதி பங்களிப்பையும் செய்வதில்லை மாறாக இந்த இந்தியர் நல நிதியிலிருந்து மட்டுமே எடுத்து செலவு செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இந்தியர் நல நிதியை கொண்டு வசதி வாய்ப்பற்ற, பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சட்ட உதவிகள், ஊர் செல்வதற்கான டிக்கெட்டுகள் போன்றவற்றுடன் போர் போன்ற அசாதரண சூழலில் இந்தியர்களை வெளியேற்றப் பயன்படும் விமானம் மற்றும் கப்பல்களுக்கான கட்டணங்களும் இந்த நிதியிலிருந்து தான் செலவிடப்படுகின்றன.

இந்தியர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டெஸ்டேஷன் போன்ற ஆவண வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது சேவை கட்டணத்துடன் 6 திர்ஹம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதுபோல் வெளிநாட்டினர் இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதும் வெளிநாடுவாழ் இந்திய பரம்பரையினர் (Overseas Citizens of India) OCI எனப்படும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதும் 8 திர்ஹம் கட்டணமாக இந்தியர் நல நிதிக்கு வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்தியர்கள் 2 திர்ஹம் கூடுதலாக செலுத்த வேண்டும் அதாவது 6க்கு பதில் 8 திர்ஹம். அதேபோல் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டில் வாழும் (OCI) இந்திய பரம்பரையினர் 8க்கு பதில் 11 திர்ஹம் செலுத்த வேண்டும்.

அமீரகத்தில் சுமார் 13.76 மில்லியன் திர்ஹம் வசூலிக்கப்பட்டு இருப்பில் உள்ளது. அமீரகத்தில் சுமார் 2.7 மில்லியன் இந்தியர்கள் வாழ்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் 3 முதல் 3.5 மில்லியன் திர்ஹங்கள் வசூலாகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.