கடந்த ரமலான் மாத இறுதியில் சவுதி அரேபியா தலைமையிலான 4 அரபுநாடுகள் சக அரபு நாடான கத்தாருடன் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துக் கொண்டதுடன் கத்தாரை இணைக்கும் சாலை, கடல் மற்றும் வான் எல்லைகளையும் மூடின.
மேலும், கத்தார் ஹஜ் பயணிகள் மட்டும் இந்த வருட ஹஜ் யாத்திரைக்காக வரலாம் ஆனால் கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்களை பயன்படுத்தாமல் பிற வெளிநாட்டு சேவைகளை மட்டும் பயன்படுத்தி ஜித்தா சர்வதேச விமான நிலையம் மற்றும் மதீனா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் வழியாக உள்நுழைய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஷேக் அப்துல்லா பின் அலி பின் அப்துல்லா பின் ஜாஸிம் அல் தானி என்ற கத்தார் அமீர் சவுதி மன்னர் சல்மானுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கத்தார் நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு மட்டும் மூடப்பட்ட சாலைவழிப் பாதையான அல் சல்வா எல்லை வாயிலை திறந்துவிடவும், கத்தார் ஹஜ் பயணிகள் மட்டும் ஆன்லைன் ஈ-பெர்மிட் இன்றி அல் சல்வா எல்லை வழியாக சவுதி உள்ளே வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சேவை நிறுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அனுப்பி அங்கிருந்தும் கத்தார் ஹஜ் பயணிகளை நேரடியாக தனது சொந்த செலவில் நடத்தப்பெறும் ஹஜ் உம்ரா விருந்தினர் அழைப்புத் திட்ட செலவின் கீழ் இலவசமாக அழைத்து வரவும் மன்னர் உத்தரவிட்டுள்ளார். (all their costs to be covered at his personal expense, within the King Salman Guests Program for Haj and Umrah)
மேலும் கூடுதலாக, தம்மாம் மற்றும் அல் ஹஸா விமான நிலையங்கள் வழியாகவும் கத்தார் ஹஜ் பயணிகள் வரலாம் என்றும் அவர்களை புனித மக்காவிற்கு அந்தந்த விமான நிலையங்களிலிருந்து அழைத்து வரும் செலவையும் மன்னரின் ஹஜ் உம்ரா விருந்தினர் அழைப்புத் திட்டத்தின் கீழ் ஏற்பதாகவும் அறிவித்துள்ளார்.
அல் ஸலாம் அரண்மனையில் அறிஞர் அப்துல்லாவிற்கும் மன்னர் சல்மானுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மான் அவர்களும் உடனிருந்தார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.