.

Pages

Wednesday, August 16, 2017

அபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந்திர தினங்கள் கொண்டாட்டம் !

அதிரை நியூஸ்: ஆக.16
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் பேக்கேஜ்களை திரும்பப் பெற்று வெளியேறும் ஹால் (baggage reclaim hall) அருகே இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு விமான நிலையங்களிலிருந்தும் வருகை தரும் இவ்விரு நாட்டுப் பயணிகளின் விழிப்புருவங்கள் ஆழ்மன மகிழ்ச்சியால் விரியும் வகையில் 'வாகா எல்லையை' நினைவுபடுத்தும் கட்-அவுட் காட்சியரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், கடந்த ஒரு வாரமாக அபுதாபி விமான நிலைய டெர்மினல் 1 மற்றும் 3 ஆகிய பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் நாட்டு கொடிகளும், வண்ணங்களும் பூசப்பட்டு இவ்விரு நாட்டு சுதந்திர தினங்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டிருந்து.

அபுதாபி விமான நிலையத்திற்கு வருகை தரும் உலகளாவிய பயணிகளில் மற்ற எந்த நாடுகளையும் விட சுமார் 22 சதவிகிதம் பேர் இவ்விரு நாடுகளிலிருந்து மட்டும் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.