.

Pages

Sunday, August 27, 2017

ஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனைத் திருவிழா !

அதிரை நியூஸ்: ஆக. 27
ஷார்ஜாவில் முதன்முதலாக கோடைகால சிறப்புத் தள்ளுபடி விற்பனை (Sharjah Summer Grand Discounts campaign) 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனைத் திருவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வியாழன் நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கும்.

ஷார்ஜா முழுவதிலுமுள்ள 1000 மேற்பட்ட சில்லரை விற்பனை கடைகளும், பல ஷாப்பிங் மால்களும், தரமான பல நிறுவனங்களின் பிராண்டுகளும் இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் பங்குபெறுவதை உறுதி செய்துள்ளன. சுமார் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் பல பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

தள்ளுபடி விற்பனையுடன் கூடுதலாக கார் போன்ற பல பரிசுப் பொருட்களும், பரிசுக் கூப்பன்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இந்த விற்பனைத் திருவிழா அமையும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஷார்ஜா அதிகாரிகள் Sharjah Tourism and Commerce Development Authority (SCTDA).

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.