.

Pages

Thursday, August 17, 2017

புனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வருகை !

அதிரை நியூஸ்: ஆக. 17
இந்த வருடம் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தரவுள்ள சுமார் 221,000 ஹஜ் பயணிகளில் நேற்று முதல் கட்டக்குழுவுடன் வருகை தந்த மூத்த பெண்மணியான பைக் மரியாஹ் (Baik Mariah) அவர்களுக்கு வயது 104 ஆகிறதென்றாலும் அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான உடல்நலத்துடன் உள்ளதாக ஜித்தாவிலுள்ள இந்தோனேஷிய கவுன்சலர் முஹமது ஹெரி சரிபுதீன் தெரிவித்தார், பைக் மரியாஹ் அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் சுமார் 10 லட்சம் முதியவர்கள் ஹஜ் செய்யக் காத்திருப்பதாகவும் இவர்களுக்கான வாய்ப்புக்கள் சுமார் 6 வருடத்திற்குள் கிடைக்கும் என்றாலும் இவர்களின் முதிய வயதால் பலர் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும், இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு வந்த சுமார் 20 இந்தோனேஷியர் இறந்துள்ளதாகவும் முஹமது ஹெரி சரிபுதீன் தெரிவித்தார்.

104 வயது வரை நீண்ட வாழ்வையும் மரணிக்கும் முன் ஹஜ்ஜூ செய்யும் பாக்கியத்தையும் இப்பெண்மணிக்கு வழங்கிய அல்லாஹ் மிகப்பெரும் கிருபையாளன், அவனே தூயவன்.

புனித மக்காவில் செயல்படும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான மையம் (The Unified Operations Center (UOC) மற்றும் நெருக்கடி மற்றும் பேரழிவுகால உதவி மையம் (The Crisis and Disaster Center (CDC) ஆகியவை ஒன்றிணைந்து தினமும் 5 ஷிப்டுகள் என்ற அடிப்படையில் ஹஜ் யாத்ரீகர்களின் அவசரகால அழைப்புகளை ஏற்று அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

கடந்த வருடம் தினந்தோறும் சுமார் 67,000 அவசரகால அழைப்புகளை சந்தித்துவந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 45,000 அழைப்புக்களே வருகின்றன. இவை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.