அதிரை நியூஸ்: ஆக. 22
நேற்று திங்கக்கிழமை ஹிஜ்ரி மாதம் துல்காயிதா 29 ஆம் நாளானதால் பிறையை காண்போர் தகுந்த சாட்சியங்களுடன் அறிவிக்கும்படி சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் தனது நாட்டில் வாழும் முஸ்லீம்களை கேட்டுக் கொண்டிருந்தது.
நேற்று பிறை தென்பட்ட செய்தி எதுவும் கிடைக்காததால் இன்று (செவ்வாய்) கூடும் சுப்ரீம் கோர்ட் பிறை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடும் என தெரிவித்துள்ளது.
நேற்று தவாப் செய்து கொண்டிருந்த 80 வயது ஈரானிய ஹஜ் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவசரகால மீட்புக் குழுவினரால் கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். சிகிச்சையை தொடர்ந்து தேறிவரும் இந்த ஹஜ் பயணி நாளை மருத்துவமனையில் இருந்து விடுபட்டு தொடர்ந்து தனது ஹஜ் கடமைகளை நிறைவேற்ற முடியும். மேலும் அவரை தொடர்ந்து கண்காணித்திட சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் இதுவரை சுமார் 24 சதவிகிதம் ஹஜ் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த வருட ஹஜ் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 3,000 வாகனங்களுடன் 17,000 தீயணைப்புத் துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நவீன தொழிற்நுட்ப தேர்ச்சியுடன் டிஜிட்டல் வரைபடங்களை வழிகாட்டியாக கொண்டும், 32 அரசுத்துறைகளுடன் இணைந்தும் செயல்படுவர்.
இதற்கிடையில், சவுதி அரேபிய விமானங்கள் கத்தார் ஹஜ் பயணிகளை ஏற்றி வருவதற்காக தோஹா செல்லவிருந்த நிலையில் அதற்கான அனுமதியை இன்னும் வழங்காமல் கத்தார் தரப்பு இழுத்தடிப்பதாக சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளதை தொடர்ந்து சவுதியின் தலைமை இமாம் முப்தி ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஹஜ் பயணிகளை தடுக்க வேண்டாம் என்று கத்தார் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை அல் சல்வா எல்லை வழியாக 443க்கு மேற்பட்ட கத்தார் ஹஜ் பயணிகள் புனித மக்காவிற்குள் வருகை தந்துள்ளனர்.
Source: Arab News & Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.