அதிரை நியூஸ்: ஆக. 26
புனிதமிகு மக்கா மற்றும் மதினா நகரங்களில் தங்கியிருக்கும் உடல் சுகவீனமுற்ற ஹாஜிகள் சுமார் 1400 பேருக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் 147 இதய பைபாஸ் ஆபரேசன்களும், 7 ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்களும், 901 கிட்னி டலாலிஸிஸ் சிகிச்சைகளும், 42 என்டோஸ்கோபிகளும், 307 இதரவகையிலான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
இரு புனித நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அவசரகால சிகிச்சை மையங்களில் இதுவரை 11,873 தங்கி உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ள நிலையில் 17,974 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும், இவ்விரு நகரங்களிலுமுள்ள சுகாதார மையங்களில் சுமார் 139,281 பேர் நோயாளிகளாக பதிவு செய்துள்ளனர்.
சவுதி அரசின் சார்பாக ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, பைபாஸ் ஆபரேசன்கள், சிறுநீரக டயாலிஸீஸ், என்டோஸ்கோபி, குழந்தைபேறு போன்ற அனைத்து சிகிச்சைகளும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவசமாகவே செய்யப்படுகிறது. மேலும், புனித ஸ்தலங்களில் 100 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 80க்கு மேற்பட்ட நடமாடும் பெரிய ஆம்புலன்ஸ் மருத்துவமனைகளும், சுமார் 29,000 மருத்துவ குழுவினரும் 24 மணிநேரமும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
1000 கத்தார் ஹஜ் பயணிகள் வருகை
இதுவரை சுமார் 1,000 கத்தார் நாட்டு ஹஜ் பயணிகள் சாலை வழி அல் சல்வா எல்லை வழியாக வருகை தந்துள்ளனர். தோஹாவிலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து ஹஜ் பயணி ஏற்றி வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், கடைசி வரை கத்தார் அரசு சவுதி விமானம் உள்ளே அனுமதிக்கவே இல்லை.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.