.

Pages

Tuesday, August 22, 2017

துபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட்டம் விரிவாக்கம்

அதிரை நியூஸ்: ஆக.22
துபையில் 'DEWA' எனப்படும் மின்சாரம் மற்றும் தண்ணீர் பகிர்மான நிறுவனத்தின் மாதாந்திர கட்டணங்களை கட்டுவதற்கு பல்வேறு எளிய வழிகள் நடைமுறையில் உள்ளன நிலையில் மேலும் பல ஸ்மார்ட் திட்டங்களும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

மின் மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்துவதற்கு எமிரேட்ஸ் என்பிடி பேங்க் (Emirates NBD) கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி தவணைமுறையில் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது இந்த வசதி மஷ்ரெக் பேங்க் (Mashreq Bank) கிரடிட் கார்டுதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி 'தேவா' கட்டணங்களை எத்தகைய வட்டியோ அல்லது கூடுதல் சேவைக்கட்டணங்களோ இன்றி 3 முதல் 6 மாத காலத்திற்குள் செலுத்தலாம்.

இதுபோன்ற ஸ்மார்ட் திட்டங்கள், ஆன்லைன் சேவை மற்றும் தேவா ஆப்களை பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களுக்கு வருவது சுமார் 80 சதவிகிதம் குறைந்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.