அதிரை நியூஸ்: ஆக. 25
துபை ஷேக் ஜாயித் சாலையில் உள்ள முக்கிய ரயில் நிறுத்தங்களில் ஒன்று நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன். நேற்று பகல் (புதன்) சுமார் 2 மணியளவில் எத்தியோப்பியா நாட்டு இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார், இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்தை அடுத்து உடனடியாக நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் வழியாக அனைத்து மெட்ரோ சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. போலீஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் சம்பவ இடம் கொண்டு வரப்பட்டது. மெட்ரோ பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக அருகாமையிலுள்ள பிற மெட்ரோ நிலையங்களுக்கிடையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாலை 3 மணிக்கு மேல் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து போலீஸாரின் பாதுகாப்பு வளையம் விளக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மெட்ரோ போக்குவரத்து நூர் பேங்க் வழியாக மீண்டும் இயங்கத் துவங்கியது.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு ஜூமைரா லேக் டவர்ஸ் ஸ்டேஷன் மெட்ரோ டிரேக் அருகே போதை ஆசாமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட முதல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெற்ற மெட்ரோ தொடர்புடைய 2வது தற்கொலை சம்பவம் இதுவாகும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.