அதிரை நியூஸ்: ஆக. 19
சவுதி அரேபியாவை பொருத்தவரை அங்கு வாராந்திர விடுமுறை நாட்களைத் தவிர்த்து ஏனைய பொது விடுமுறை நாட்கள் வரைமுறைப்படுத்தப்பட்டது. அங்கு மன்னரே மறைந்தாலும் பொது விடுமுறை கிடையாது.
என்றாலும் ரமலானையொட்டி வரும் நோன்புப் பெருநாளிற்கு சுமார் 1 வார காலமும், ஹஜ்ஜூப் பெருநாளிற்கு சுமார் 2 வாரங்களும் விடுமுறை விடப்படும். (தனியார் நிறுவனங்களின் விடுமுறைகள் நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும்) அந்த நடைமுறையில், இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை நாட்களாக துல்ஹஜ் பிறை 2 முதல் பிறை 18 வரை என தொடர்ந்து 16 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் பணி துல்ஹஜ் பிறை 19 முதல் துவங்கும்.
இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாள் எதிர்வரும் 01.09.2017 (துல்ஹஜ் பிறை 10) வெள்ளிக்கிழமை அன்று அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (துல்ஹஜ் பிறை எதிர்வரும் 21.08.2017 அன்று பார்க்கப்படும்)
ஹஜ்ஜூப் பெருநாளுக்கு முன்தினம் ஹாஜிகள் அனைவரும் அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடும் தினத்தில் ஹஜ்ஜூக்கு செல்லாத பிற முஸ்லீம்கள் அனைவரும் அரஃபா நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதால் அனைவரும் நோன்பு நோற்று நன்மைகளை பெற்றுக் கொள்ள மறக்க வேண்டாம்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.
அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.
"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்"
அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருக்கும் ஹாஜிகள்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.
Thanks to:
http://www.satyamargam.com/islam/13-islamic-articles/370-fasting-on-arafa-day.html

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.