துபையில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF) 2 வது ஆலோசணை அமர்வு 18.08.2017 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் துபை மண்டல த.மு.மு.க மர்கஸில் கூடியது. இந்த ஆலோசணை அமர்வை S.T. ஜியாவுதீன் அவர்கள் அமீராக இருந்து வழிநடத்தினார்கள்.
சென்ற மாத அமர்வில் (28.07.2017) வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் இந்த அமர்வில் கீழ்த்தெரு, கடற்கரைத் தெரு, தரகர் தெரு, நெசவுத் தெரு, மேலத்தெரு என தெருவுக்கு 3 அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசணை அமர்வின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு எனும் பழைய நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் முற்றிலும் முடங்கிப் போய்விட்டதாலும், அதன் நிர்வாகிகளில் பலர் அமீரகத்திலிருந்து விடைபெற்று சென்றுவிட்டதாலும், பழைய நிர்வாகம் மீண்டும் கூடுவதற்கான எத்தகைய அறிகுறியும் இல்லாததாலும், செயல்படாத அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தியால் சில முஹல்லாகள் கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்திருந்ததாலும் பழைய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.
2. கலைக்கப்பட்டுவிட்ட பழைய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகத்திற்கு மாற்று ஏற்பாடாக சுமார் 3 மாத காலத்திற்கு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த அட்ஹாக் கமிட்டி 2வது ஆலோசணை அமர்விற்கு வருகை தந்திருந்த முஹல்லா பிரதிநிதிகள் குழு மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிலிருந்தும் முஹல்லாவிற்கு ஒருவர் என தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு,
1. S.T. ஜியாவுதீன்
2. S.M.A. சாஹூல் ஹமீது
3. N. முஹமது மாலிக்
4. Y. மைதீன்
5. M. அஸ்லம்
6. T. அப்துல் காதர்
3. இந்த 2வது ஆலோசணை அமர்வில் கலந்து கொள்ள இயலாத அதிரையின் பிற முஹல்லா சங்கப் பிரதிநிதிகளை அட்ஹாக் கமிட்டி உறுப்பினர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடி எதிர்வரும் ஆலோசணை அமர்வுகளில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்துவது.
அதற்கான அழைப்புக்குழுவினர் பெயர்கள் வருமாறு,
1. N. அப்துல் ஹாதி
2. T. அப்துல் காதர்
3. Y. மைதீன்
4. P.O. பக்கீர் முஹம்மது
5. S.M.A. சாஹூல் ஹமீது
4. புதிய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆலோசணை கூட்டங்களை பிரதி மாதம் 3வது வெள்ளிக்கிழமைகளில் மஃரிப் தொழுகைக்குப் பின் நடத்துவது.
5. எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறையில் பெரும்பாலான முஹல்லா பிரதிநிதிகள் மற்றும் அட்ஹாக் கமிட்டி உறுப்பினர்கள் ஊருக்கு செல்வதால் அவர்களில் வாய்ப்புள்ளவர் தங்களுக்குள் பேசி பிரதிநிதிகளை இணைத்துக் கொண்டு அதிரையின் அனைத்து முஹல்லா சங்கங்களின் நிர்வாகிகளையும் சந்தித்து, காலத்தின் தேவை கருதி நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஊரிலும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பை மீண்டும் வீரியமாக செயல்பட வேண்டிய தேவையை உணர்த்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவண்
அட்ஹாக் கமிட்டி
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF)
துபை, ஐக்கிய அரபு அமீரகம்.
மாஷா அல்லாஹ், சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
ReplyDeleteஏன் பேரூர் ஆட்சி தேர்தல் நெருங்கிவிட்டதோ
ReplyDelete