அதிராம்பட்டினம், ஆக. 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வாயிலில்
பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பல்கலைக் கழக ஆசிரியர் சங்கக் கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். மேலும், 1 நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் டி.லெனின் தலைமை வகித்தார். துணைச்செயலர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், துணைத் தலைவர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், பொருளாளர் பேராசிரியர் எம்.பிரேம் நவாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சங்கச் செயலர் பேராசிரியர் ஜெ.சொக்கலிங்கம், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் சங்கப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.