![]() |
மேலாளர் ஹமீத்கான் |
நகைக் கடனை புதிப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
அன்புநிறை வாடிக்கையாளர்களே,
இது சென்ற வருடம் 31-07-2016க்கு முன் நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் சிறப்பு முகாம்.
தாங்கள் செலுத்த வேண்டிய நகைகடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி நகைக்கடனை புதிப்பித்துக்கொள்ள ஒரு சிறப்பு முகாம் ஒன்று எதிர்வரும் 29-08-2017, 30-08-2017 மற்றும் 31-08-2017 ஆகிய மூன்று தினங்களில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி, அதிராம்பட்டினம் கிளையில் நடைபெற இருக்கின்றது.
இவ்வாறு இவ்வாய்ப்பை பயன்படுத்தக் கொள்ள விரும்புபவர்கள் சிறப்பு முகாம் நடக்கும் தினங்களில் அன்று காலை 09.30 மணி முதல் 10.00 மணிக்குள் வங்கிற்கு வந்து, நகைக்கடனை புதிப்பித்துக் கொள்வதற்காக, தங்களது நகைகடன் அட்டையை வழங்கி பதிவு செய்துக் கொள்ள வேண்டுகிறோம்.
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நகை ஏலத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
மேளாளர்,
பாரத ஸ்டேட் வங்கி,
அதிராம்பட்டினம்.
வட்டிக்கு துணை போவதையும், ஊக்குவிப்பதையும் தவிர்க்கவும்.
ReplyDeleteவட்டிக்கு துணை போவதையும், ஊக்குவிப்பதையும் தவிர்க்கவும்.
ReplyDelete