![]() |
கோப்புப் படம் |
அமீரகம் ஒருபுறம் அதிநவீனமாகி கொண்டு செல்கிறது. துபையில் ஏற்கனவே ஹைப்பர்லூப், டிரைவரில்லாமல் இயங்கும் வாகனம், பறக்கும் டேக்ஸி, உணவு டெலிவரி செய்யும் டிரோன்கள் ஒருபுறம்,
இன்னொரு புறம் மெட்ரோ ரயில்கள், டிராம்கள், மின் ஆற்றலில் இயங்கும் கார்கள், மின் ஆற்றலும் பெட்ரோலும் இணைந்த ஹைப்ரீட் வாகனங்கள், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், நீர்வழி போக்குவரத்துக்கள் என பற்பல வாகன வசதிகள் உள்ளன.
அபுதாபியில் துபை அளவுக்கு போக்குவரத்தில் அசூரவேக நவீன அறிமுகங்கள் இல்லாவிட்டாலும் எனும் மனப்பான்மை நிலவுவதையும் மறுக்க இயலாது. அந்த வகையில், அபுதாபியின் போக்குவரத்தின் ஒரு அங்கமாக 'கேபிள் கார்' எனப்படும் சேவை விரைவில் ஆரம்பமாகவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
இந்த கேபிள் கார்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பமாக 5 ஸ்டேஷன்களுடன் துவங்கவுள்ள இந்த திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Scoop Empire / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.