.

Pages

Thursday, August 24, 2017

ஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி பொறுப்பாளரிடம் ஓப்படைப்பு!

அதிரை நியூஸ்: ஆக. 24
புனித கஃபத்துல்லாஹ்வை சுற்றிப் போர்த்தப்பட்டுள்ள கருமை நிற கிஸ்வா போர்வை வருடந்தோறும் ஹாஜிகள் அனைவரும் துல்ஹஜ் பிறை 9 ஆம் நாள் அரஃபா பெருவெளியில் கூடியிருக்கும் சமயத்தில் மாற்றப்படும். இந்த வருடத்திற்கான புதிய கிஸ்வா போர்வையை கஃபத்துல்லாவின் மூத்த பொறுப்பாளர் சலேஹ் அல் ஷைபீ அவர்களிடம் மன்னர் சல்மான் அவர்களின் சார்பாக புனித மக்காவின் அமீர் காலித் அல் பைஸல் அவர்கள் ஒப்படைத்தார்.

கிஸ்வா துணி ஒரு பார்வை:
14 மீட்டர் உயரமும் 47 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கிஸ்வா துணி 650 கிலோ பட்டு நூற்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த கிஸ்வா போர்வை 5 தனித்தனி துண்டுகளாக தயாரிக்கப்பட்டு ஒன்று சேர்க்கப்படுகின்றன.

கஃபாவில் போர்த்தப்பட்டுள்ள கிஸ்வா துணியின் மேற்பகுதியில் 95 சென்டிமீட்டர் உயர பரந்த துண்டில் காணப்படும் குர்ஆனிய வசனங்கள் 120 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி ஜரிகைகளை கொண்டு பின்னப்படுகின்றன. கைதேர்ந்த வல்லுனர்களை கொண்டு இந்த கிஸ்வா துணி தயாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று புனித மக்கா நகரில் அமைந்துள்ள ஹஜ் பாதுகாப்பு படையினரின் சிறப்பு முகாமில் சவுதியின் பட்டத்து இளவரசரும், துணை பிரதமரும் ராணுவ மந்திரியுமான முஹமது பின் சல்மான் அவர்கள் புனித ஹஜ்ஜிற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.