.

Pages

Wednesday, August 23, 2017

புனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட குடைகள் அமைக்க திட்டம் !

அதிரை நியூஸ்: ஆக. 23
புனிதமிகு மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீஃபை சுற்றியுள்ள திறந்தவெளி முற்றங்களில் புனித மஸ்ஜிதுன்னபவியில் அமைக்கப்பட்டுள்ளதை போன்ற பிரமாண்ட குடைகள் அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட ஆய்வு திட்டங்கள் நிறைவுற்றுள்ளன.

புனித மதினாவில் உள்ள குடைகளின் அளவு 25 X 25 ஆனால் புனித மக்காவில் அமைக்கப்படவுள்ள குடைகளின் அளவோ 53 X 53. இதுபோன்ற பிரம்மாண்ட அளவில் குடை வடிவங்கள் உலகில் எங்குமே இதுவரை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குடைகள் புனிதப் பள்ளியின் முற்றங்களில் மட்டுமல்லாது மொட்டை மாடிப் பகுதியிலும் அமைக்கப்படுகின்றன. இந்த குடைகள் அமைக்கப்படுவதற்கான வேலைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் துவங்கும்.

இந்த வருடம் நிறைவடைந்த மடஃப் (Mataf) எனும் தவாப் சுற்றும் பகுதிகளின் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தால் கூடுதலான யாத்ரீகர்கள் எளிதாகவும், விரைவாகவும் தவாப் செய்ய இயலும்.

ஹஜ் யாத்ரீகர்கள் தவாப் சுற்றும் போதும், புனிதப் பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும், புனிதப் பள்ளியை சுற்றியுள்ள சாலைகளிலும் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறிய வகை நவீன கருவிகள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 5,900 நவீன கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இம்முறை டிரோன்கள் (drones) எனப்படும் குட்டி விமானங்கள் மூலம் சந்தேக நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த வருடம் 9,500 சிறப்பு கூடுதல் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 6,000 பேர் புனித ஸ்தலங்களான மினா, அரஃபா, முஜ்தலிபா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 'அல் மஷாயர்' எனப்படும் மெட்ரோ ஸ்டேஷன்களில் ஹஜ் யாத்ரீகர்கள் இலகுவாக பயணம் செய்யவும் விரைவாக கடக்கவும் உதவுவார்கள். எஞ்சிய 3,500 பேர் புனித ஸ்தலங்களை சுற்றி போக்குவரத்து ஒழுங்குகளை போலீஸாருடன் இணைந்து மேற்கொள்வர்.

அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஹஜ் யாத்ரீகர் எங்கும் தேங்காமல் முறையாக புனித ஸ்தலங்களுக்கிடையே கடந்து செல்ல குழுவிற்கு தகுந்தவாறு நேரம் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்கவும் உதவவும் சுமார் 15,000 சமூக ஆர்வலர்களும், மாணவ தொண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எவராவது குறிக்கப்பட்டுள்ள நேரத்தை மீறினால் அல்லது தேங்கினால் அல்லது உட்கார்ந்து கொண்டால் அவர்கள் அப்புறப்படுத்தப்படுவதுடன் அவர்கள் மீது கடும் அபராதங்களும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.