இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு “இந்தியன் நேஷனல் ஆர்மி ” ( INA ).
இந்த அமைப்பில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களாகிய காலஞ்சென்ற பெரிய மின்னார் மு. முகம்மது ஷரிப் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் பணி புரிந்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக கடமையாற்றியவர்கள். இவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் ஆவார்.
மேலும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தியாகிகள் காலஞ்சென்ற எஸ். எஸ். இப்றாஹீம் மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோர் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக கடமையாற்றியது அதிராம்பட்டினம் பகுதிக்கு பெருமை சேர்க்கிறது. மறைந்த இவர்களைப் போல் அதிராம்பட்டினம் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவரையும் கண்டறிந்து வரலாற்று ஏடுகளில் பதியப்பட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் தொடங்கிய இந்நாளில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம். மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்...
We must honour with them.
ReplyDelete