தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுக் கட்டிட உரிமையாளர்களும் கட்டிட உரிமம் பெற வேண்டும். கட்டிடம் புதுப்பித்தலுக்கும் உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு (மற்றும்) தனியார், அரசு உதவி பெறும் பொது கட்டிடங்களான பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், டுடோரியல் பயிலகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், கேளிக்கை விடுதிகள் (Clubs) பயணியர் தங்கும் விடுதிகள், உணவகங்கள், நூலகங்கள், கல்யாண மண்டபங்கள், சத்திரங்கள், சமுதாய மன்றங்கள் போன்ற பொது மக்கள் கூடும் அனைத்து கட்டிடங்களுக்கும் தமிழ் நாடு கட்டிடங்கள் (உரிமம்) சட்டம் 1965ன்படி கட்டிட உரிமங்கள் கண்டிப்பாக பெறப்பட வேண்டும்.
மேலும் அவை உரிய கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டும். கட்டிடங்களில் ஏதாவது மாற்றங்கள் அல்லது புதியக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பின் ஏற்கனவே உரிமம் பெறப்பட்டிருப்பினும், புதிதாக உரிமம் பெறப்பட வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் கட்டிடங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதால் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதைவிட, பொது மக்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக என்பது அனைவரும் அறிந்ததே. எனவே தமிழ்நாடு கட்டிடங்கள் உரிமம் சட்டம் 1965ன்படி கட்டிடி உரிமம் பெறப்படாத கட்டிடங்களுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு தொடர்புடைய கட்டிட உரிமையாhள்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் நேரிடும். எனவே அனைத்து பொதுக் கட்டிட உரிமையாளர்களும் கட்டிட உரிமத்தினை விரைந்து பெற்றிடவும் /புதுப்பித்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், புதுப்பிக்கும் நபர்கள் மத்திய அரசு மாநில நகராட்சி சொந்தமான கட்டிடங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் வருவாய் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர் அவர்களிடமும், மற்ற அனைத்து கட்டிடங்களுக்கு வட்டாட்சியர் அவர்களிடமும் உரிமத்திற்கு விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம். பொது கட்டிட உரிமம் பெற கட்டிடத்திற்கான உறுதிச் சான்று தகுதி வாய்ந்த பொறியாளர்களிடம் (அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்) பெற்றும், பொது சுகாதாரத்துறையிடமிருந்து சுற்றுப்புற தூய்மைக்கான சான்று அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைப்படம் கட்டிடம் உரிமம் பெற்றதற்கான கட்டணம், கல்யாண மண்டபங்களில் தீயணைப்பு துறையிடமிருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்று போன்ற சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.