.

Pages

Wednesday, October 31, 2018

சவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான 'மஸாஜித்' வெளியீடு!

அதிரை நியூஸ்: அக். 31
சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான (Minister of Islamic Affairs, Call and Guidance) அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் பன்முக சேவைகளை வழங்கும் 'மஸாஜித்' (மஸ்ஜிதுகள்) எனப்படும் புதிய ஆப் (Masajid App) ஒன்றை வெளியிட்டார்.

ஆரம்பமாக, இந்த ஆப்பை  பயன்படுத்தி அருகாமையிலுள்ள பள்ளிவாசல்களை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்பதுடன் அப்பள்ளிகளின் இமாம் மற்றும் முஅஸ்ஸின்களையும் தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் உபயோகிப்பாளர்கள் iphone: goo.gl/b9F3BP என்ற முகவரியிலிருந்தும், ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் Android: goo.gl/3CLGky என்ற முகவரியிலிருந்தும் இந்த ஆப்பை (செயலி) தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

குவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்கு மாற அனுமதி பெற வேண்டும்!

அதிரை நியூஸ்: அக்.31
குவைத்தில் அரசுத்துறையில் வேலை பார்க்கும் ஒருவர் தனியார் துறைக்கு மாற (Transfer) அல்லது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒருவர் அரசுத்துறை வேலைக்கு மாற வேண்டுமெனில் குவைத் சிவில் சர்வீஸ் கமிஷனின் ஒப்புதலை (approval) பெற வேண்டும் என வேலைவாய்ப்புத் துறையின் செய்தித் தொடர்பு மேலாளர் அஸீல் அல் மஜ்யாத் தெரிவித்துள்ளார்.

அரசுத்துறை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரை தனியார் நிறுவனம் வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பினால் அதற்கான தகுந்த காரணத்தை தெரிவிப்பதுடன் அவருடைய கல்வித்தகுதிகள் அந்த வேலைக்கு பொருந்திப் போவதாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

(while an employer has to justify his need for those transferring from the government to the private sector, provided the license has vacant positions that match these workers’ qualifications)

Source: Kuwait Times
தமிழில்: நம்ம ஊரான்

வாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூ.55 ஆயிரம் நிதி உதவி!

அதிராம்பட்டினம், அக்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் ரஹ்மான். ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த அக்.24 ந் தேதி மனைவி ஆய்ஷா (வயது 23), தனது 8 வயது பெண் குழந்தை ஆகியோருடன் ஆட்டோ வாகனத்தில் அதிரையிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மணமேல்குடி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆயிஷாவின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரால், தனது மனைவியின் கால் ஆப்ரேஷன் ~ தொடர் சிகிச்சை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத நிலையில் பெண்ணின் குடும்பத்தார் நம்மிடையே உதவியை கோரி இருந்தனர்.

இந்நிலையில், அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ஏற்பாட்டின் பேரில், ரியாத் வாழ் அதிரை சகோதரர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் ரூ.5 ஆயிரம், ஆகக் கூடுதல் ரூ. 55 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை, பெண்ணின் குடும்பத்தாரிடம் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அருகில், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மருத்துவ நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட பெண்ணின் குடும்பத்தார் கொடையளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறிவிப்பு!

அதிராம்பட்டினம், அக்.31
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 1955 ஆம் ஆண்டு கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களால் துவக்கப்பட்டு 65 ஆண்டு காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்விப் பணியாற்றி வருகிறது. ஆண்டுதோறும் அனைத்து முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கிலும், துறைவாரியான கூட்டம் குறிப்பிட்ட நாட்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களும் மேற்படி சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
அலைப்பேசி: 9443777236  / வாட்ஸ்அப்: 6374455737
E-mail id : principal.kmcadirai@gmail.com /  kmcadiraialumini@gmail.com   

கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள்...

























 

உலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~ ஒரே வாரத்தில் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்!

அதிரை நியூஸ்: அக்.31
உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ஒரே வாரத்தில் 7வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேற்றம்

உலகின் வலிமையான, மதிப்புமிக்க பாஸ்போர்ட் உடைய நாடுகளின் பட்டியலில் கடந்த வாரம் 8வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியிருந்தது இதன் மூலம் 159 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசாக்களை பெற்று எளிதாக சென்று வரலாம்.

இந்நிலையில் 162 நாடுகளுக்கு மேற்கூறப்பட்ட அடிப்படையில் சென்று வரலாம் என்று எண்ணிக்கையில் மேலும் 3 நாடுகள் உயர்ந்ததை அடுத்து அமீரக பாஸ்போர்ட் 4வது இடத்திற்கு முன்னேறியதுடன் ஏற்கனவே 4வது இடத்திலுள்ள செக் ரிபப்ளிக் மற்றும் ஹங்கேரியுடன் இந்த பெருமையை பகிர்ந்து கொண்டுள்ளது.

அமீரக பாஸ்போர்ட் உடையவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசா மூலம் செல்லலாம் என்பது குறித்து தெரிந்து பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனத்தின் சுட்டியை சற்று தட்டிப்பாருங்கள்.

https://www.passportindex.org/comparebyDestination.php?p1=ae&fl=&s=yes

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை!

அதிரை நியூஸ்: அக்.31
இஸ்ரேல் பிரதமர் ஓமனுக்கு வருகை தந்ததை தொடர்ந்து அமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டால் தினந்தோறும் பாலஸ்தீன மக்கள் தங்களின் சொல்லெணாத் துயரை நித்தமும் அனுபவித்து வருகின்றனர். அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி என  வர்ணிக்கப்படும் இஸ்ரேலை ஒரு நாடாகவே இதுவரை அரபு நாடுகள் அங்கீகரிக்கவில்லை மேலும் எத்தகைய தூதரக தொடர்புகளோ, போக்குவரத்தோ ஏதுமில்லை எகிப்து மற்றும் ஜோர்டானைத் தவிர.

ஒரு முஸ்லீம் நாடு என்ற அடிப்படையில் முதன்முதலாக 1949 ஆண்டே இஸ்ரேலை அங்கீகரித்த ஒரே நாடு துருக்கி மட்டுமே. 2013 ஆம் ஆண்டு தூதரக உறவு அறுபட்டாலும் மீண்டும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தூதரக உறவுகளை புதுப்பித்துக் கொண்டனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.26) அன்று இஸ்ரேலின் பிரதமர் ஓமனுக்கு ரகசியமாக சென்று அதன் ஆட்சியாளர் சுல்தான் அல் கப்பூஸை சந்தித்து விட்டு வந்தார். ராஜாங்க ரீதியிலான உறவுகள் ஏதுமில்லாத நிலையிலும்  ஒரு இஸ்ரேலிய பிரதமர் அரபுநாடான ஓமனுக்கு சென்று வந்தது உலக முஸ்லீம்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஓயுமுன்பே ஓமன் ஆட்சியாளர் சுல்தான் அல் கப்பூஸ் 'இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக' கூறி உலக முஸ்லீம்களுக்கு மேலும் அவநம்பிக்கைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், இஸ்ரேலின் விளையாட்டுத்துறை அமைச்சர் 'மிரி ரெகவ்' (miri Regev) என்பவர் இஸ்ரேலிய ஜூடோ விளையாட்டுக் குழுவுடன் அபுதாபிக்கு வந்து ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றதையும், மைதானத்தில் இஸ்ரேலிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும், ஷேக் ஜாயித் மஸ்ஜித் என அழைக்கப்படும் சுற்றுலாத் தளத்திற்கு வந்திருந்ததையும், அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்ட முதல் இஸ்ரேலிய அமைச்சர் என்ற செய்தியையும் பெருமையுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பகிரங்கமாக எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஈரானிய அதிபர் யூத ரப்பிக்களுடன்
ஈரானுடைய அச்சறுத்தலை, பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக அரபு நாடுகளும் இஸ்ரேலும் ஒன்றிணைய வேண்டும் என்ற வாதத்தை இஸ்ரேல் முன் வைக்கின்றது ஆனால் இஸ்ரேலும் ஈரானும் கள்ளக்கூட்டாளி நாடுகள் என்பது உலகமறிந்த உண்மை.

ஏற்கனவே இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சவுதி அரேபியாவின் மீது பறக்க சவுதி அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியில் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் மற்றும் சவுதி ராணுவத் தளபதிகள் சந்தித்து 'ஈரானிய அச்சுறுத்தல்' குறித்து விவாதித்தனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

https://www.telegraph.co.uk/news/2018/03/23/saudi-arabia-opens-airspace-israel-bound-flight-first-time/

https://www.presstv.com/DetailFr/2018/10/17/577236/Saudi-Arabia-Israel-Gadi-Eizenkot

பாலஸ்தீன மக்களை கைவிட்டு விடாதே யா அல்லாஹ், அவர்களின் ஈமானையும் மனவலிமையையும் அதிகரிக்கச் செய்வாயாக! ஆக்கிரமிப்பு இஸ்ரேலை விரட்டியடித்து மீண்டும் சுதந்திர பாலஸ்தீனம் மலர துணை புரிவாய் யா அல்லாஹ்.

Source: Arab News / Press tv etc..
தமிழில்: நம்ம ஊரான்

ஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய ஒளி மின்சக்திக்கு மாறின!

அதிரை நியூஸ்: அக்.31
ஜோர்டான் தலைநகரில் உள்ள மஸ்ஜிதுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் 100% சூரிய ஒளி மின்சக்திக்கு மாறின

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள மஸ்ஜிதுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் கிட்டதட்ட 100% சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்புக்கு மாறியதுடன் எஞ்சும் மின்சாரத்தை அரசிற்கும் விற்கின்றன. ஜோர்டான் அரசின் சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்சார தயாரிப்பு மற்றும் எல்இடி விளக்குகள் பாவனை என மின் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மஸ்ஜிதுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதுடன் எஞ்சிய மின்சாரத்தை அரசின் மின் திட்டத்திற்கு விற்றும் பொருளீட்டுகின்றன.

மேலும் காற்றில் பரவியுள்ள மாசை கட்டுப்படுத்தும் நோக்குடன் கரியமில வாயுவை அதிகம் உறியும் தன்மையுடைய மரங்களை வளர்க்கவும் ஜோர்டன் அரசு முனைப்புகாட்டி வருகின்றது. அத்துடன் அபுதாபியை சேர்ந்த மஸ்தார் நிறுவன உதவியுடன் ஜோர்டானில் பிரம்மாண்ட சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)

அதிரை நியூஸ்: அக்.31
அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி M.M.S முகமது பாஸி அவர்களின் மகனும், மர்ஹும் கா.நெ அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், M.M.S ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மைத்துனரும், M.M.S பஷீர் அகமது, M.M.S ஜாஹிர் உசேன், M.M.S அன்வர் பாட்சா, M.M.S முகமது சேக்காதி ஆகியோரின் சகோதரரும், ரிஜ்வான் அகமது, முகமது நவீத் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அஜ்மல்கான் (வயது 56) அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (31-10-2018) புதன்கிழமை காலை 10.30 மணியளவில்  பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை பஹாத் முகமது கோரிக்கை மனு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நேற்று (30.10.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம், சக்கர நாற்காலி, தொழிற்கடன், வேலை வாய்ப்பு, வீடு தொகுப்பூதியம், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நேரில் அளித்தனர்.  இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரையும், இதர துறை அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டத்தில் 47 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாற்றுத்திறனாளிகள் அளித்தனர்.  இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தலைவர் ஏ. பஹாத்அகமது தலைமையில், அவ்வமைப்பின் நிர்வாகிகள் இளங்கோவன், சிவப்ப்ரியா, ஜலீல் முகைதீன், குமரேசன், இப்ராஹீம் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன்,  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

Tuesday, October 30, 2018

துபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்!

அதிரை நியூஸ்: அக்.30
துபையில் 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு தினமும் தொடர்ந்து உதவி வரும் மனிதநேய இந்தியப் பெண்

துபை அல் ஸபா – 1 ஏரியாவில் கடந்த 9 மாதங்களாக பைப் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் சுமார் 100 தொழிலாளர்கள். இவர்களை சுமார் 6 மாதங்களுக்கு முன் வெயிலில் கண்ட ஒரு இந்தியப் பெண் அன்று முதல் நாள் தவறாமல் அந்த 100 தொழிலாளர்களுக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஆப்பிள் போன்றவற்றை பேக் செய்து தனது சூப்பர் மார்க்கெட் ஊழியர் மூலம் வழங்கி வருகின்றார். உதவிபெறும் தொழிலாளர்கள் கூட அவரை இதுவரை பார்த்ததில்லை.

சில நாட்கள் சாக்லெட், இனிப்பு வகைகளும் கூடுதலாக கிடைக்குமாம். ஒரு நாள் காலுறை (சாக்ஸ்) மற்றும் தொப்பி ஒன்றையும் வழங்கியுள்ளார் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அந்த மனிதநேய இந்தியப் பெண்.

Gulf News பத்திரிக்கை சார்பாக அவரை தொடர்பு கொண்டு பேட்டி கண்ட போதும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்துவிட்டதுடன் தான் இதை விளம்பரத்திற்கு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப் பெண் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இதேபோல் மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றாராம்.

அந்த நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர் எந்நாளும் நலமுடனும் வளமுடனும் வாழட்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தொழில் முதலீடு திட்டம்!

2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தொழில் முதலீடு ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தொழில் முனைவோர்கள் மற்றும் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது :-
எதிர்வரும் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளையும், நடைமுறைகளையும்  வழங்கும் பணி மாவட்ட தொழில் மையம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, கயிறு வாரியம், மருத்துவ துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகி விவரங்களை பெற்று பயன் பெறலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், திட்ட மேலாளர் ரவிச்சந்திரன், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், தொழில் தொடங்குவதற்கான தடையில்லா சான்று வழங்கும் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

அமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை நீட்டிப்பு ~ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதிரை நியூஸ்: அக்.30
நாளை அக்.31 ஆம் தேதியுடன் முடிவடையும் 3 மாத அமீரக பொதுமன்னிப்புக் காலம் மேலும் ஒரு மாதம் அதிகாரபூர்வமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக எதிர்வரும் 2018 டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கியிருப்போர் அபராதம், சிறைத் தண்டனை மற்றும் மறுபடியும் அமீரகத்திற்குள் வர விசா தடையின்றி வெளியேறலாம் அல்லது முறைப்படி உங்களுடைய விசாவை புதுப்பித்து ரெஸிடென்ஸி நிலையை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் வேலை தேடுபவர்கள் தங்களுடைய சுய ஸ்பான்சர் அல்லது பிறருடைய ஸ்பான்சரின் கீழ் 6 மாத குறுகிய கால விசாவை பெற்றுக் கொண்டு அமீரகத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலை தேடிக் கொள்ளலாம்.

இந்த பொது மன்னிப்பிற்காக அமீரகத்தில் கீழ்க்காணும் 9 இடங்களில் உதவி மையங்கள் செயல்படுகின்றன.

Location of centres
In Abu Dhabi, the registration centre is located at immigration office in Shahama, Al Ain and Al Gharbia.

In Dubai the registration centre will be in Al Aweer while in other emirates, the registration centers will be at the main immigration offices.

Reception centres are also set up in Sharjah, Ajman, Fujairah, Ras Al Khaimah and Umm Al Quwain.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்டு விளையாட்டு விழா!

அதிராம்பட்டினம், அக்.30
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (அக்.30) செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளி முதல்வர் என்.ரகுபதி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர்கள் என்.ஜெயவீரன், ஜெ.சொக்கலிங்கம், உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். விழாவை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் டி.தமிழ்ச்செல்வம், யூ.சிலம்பரசன், எஸ்.அனிதா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் வழி நடத்தினர். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் செய்திருந்தார்.

துபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சாதனை!

அதிரை நியூஸ், அக்.30
தஞ்சாவூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ஷாஜஹான். இவர்,  ஷார்ஜாவில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுஹைனா (வயது 11). ஷார்ஜாவில் உள்ள இந்திய சர்வதேச சிபிஎஸ்இ பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அமீரகத்தில் நடப்பாண்டு 'ஜாயித்' ஆண்டாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தினத்தந்தி அமீரகப் பதிப்பு சார்பில், அமீரக மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி அக். 27ந் தேதி நடைபெற்றது.

'அமீரகத்தின் தந்தை சேக் ஜாயித்' என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில், அமீரகத்தின் பல்வேறு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் 200 பேர் பங்குபெற்றனர். இதில், மாணவி சுஹைனா மூன்றாமிடம் பிடித்து சாதனை நிகழ்த்தினர். விழாவில், சிறப்பு விருந்தினராக 'எழுத்தாளர்' பட்டுக்கோட்டை பிரபாகர் கலந்துகொண்டு, மாணவிக்கு கேடயப்பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய மாணவி ஹனான் ஹில்மிய்யாவுக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.