இக்கூட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம், சக்கர நாற்காலி, தொழிற்கடன், வேலை வாய்ப்பு, வீடு தொகுப்பூதியம், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நேரில் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரையும், இதர துறை அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டத்தில் 47 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாற்றுத்திறனாளிகள் அளித்தனர். இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தலைவர் ஏ. பஹாத்அகமது தலைமையில், அவ்வமைப்பின் நிர்வாகிகள் இளங்கோவன், சிவப்ப்ரியா, ஜலீல் முகைதீன், குமரேசன், இப்ராஹீம் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.