.

Pages

Wednesday, October 24, 2018

உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இடத்தில் அமீரகம்!

அதிரை நியூஸ்: அக்.24
ஒரே மாதத்தில் உலகின் மிக வலிமையான பாஸ்போர்ட் என்ற தகுதியில் அமீரகம் மேலும் ஒருபடி முன்னேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் உலகின் மிக வலிமையான, மதிக்கத்தக்க பாஸ்போர்ட் என்ற தகுதியில் கடந்த மாதம் தான் 8வது இடத்திற்கு வந்திருந்தது. இந்நிலையில் மெக்ஸிகோ நாட்டுடன் செய்து கொண்ட பரஸ்பர விசாயில்லா பயண ஒப்பந்ததிற்குப் பின் மேலும் ஒரு படி முன்னேறி 7 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

மெக்ஸிகோ நாட்டுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பின் அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்போர் உலகின் சுமார் 159 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசாவின் (On Arrival Visa) கீழ் பயணம் செய்யலாம் அதாவது உலகின் 112 நாடுகளுக்கு விசா இல்லாமலும் 47 நாடுகளுக்கு விமான நிலையத்தில் விசா பெற்றும் விசா தடங்கல்கள் ஏதுமின்றி சென்று வரலாம்.

சுமார் 1 வருடத்திற்கு முன் 130 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி சென்று வரலாம் என்றிருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் வலிமையான பாஸ்போர்ட்டாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது எனினும் கடந்த 2018 ஜூலை 9ஆம் தேதியன்றே வலிமைமிக்க முதல் 10 பாஸ்போர்ட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்திவிட்டது.

Most powerful passports in the world (Top 10)
1. Singapore, Germany
2. Denmark, Sweden, Finland, Luxembourg, France, Italy, Netherlands, Spain, Norway, South Korea, United States
3. Belgium, Austria, Japan, Greece, Portugal, Switzerland, United Kingdom, Ireland, Canada
4. Czechia (Czech Republic) , Hungary
5. Malta, Malaysia, Iceland, New Zealand, Australia
6. Slovenia, Poland, Lithuania, Slovakia, Latvia
7. UAE, Estonia
8. Romania, Bulgaria
9. Cyprus, Liechtenstein
10. Croatia, Monaco

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.