.

Pages

Wednesday, October 17, 2018

பள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தஞ்சாவூர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகத்தில் சுற்றுலாத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (17.10.2018) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களின் சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது : -
பள்ளி மாணவ மாணவர்களிடையே சுற்றுலா செல்வதன் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாள் கல்வி சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்ட சுமார் 150 மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுலா  அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுற்றுலா செல்லும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக உணவு, புத்தக பை, கணித பெட்டி, பேனா வழங்கப்படுகிறது.  மேலும், சுற்றுலா செல்லும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சுற்றுலா சென்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம்கோட்டை, குடுமியான்மலை, அரசு அருங்காட்சியகம், பிரகதாம்பாள்கோவில், சித்தன்னவாசல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு கண்டுகளிக்க உள்ளனர். என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.