.

Pages

Sunday, October 21, 2018

பஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத்தால் விலை பன்மடங்கு உயர்வு!

அதிரை நியூஸ்: அக்.21
பஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத்தால் விலை பன்மடங்கு உயர்ந்தது

பஹ்ரைன் அரசு இறைச்சி (Meat), கோழிக்கறிகளுக்கு (Poultry Products) இதுவரை வழங்கி வந்த மானியங்களை (Subsidies) ரத்து செய்தது. கடந்த வியாழன் அன்று பிறப்பிக்கப்பட்ட மானிய ரத்து உத்தரவை தொடர்ந்து இறைச்சி உணவுகளின் விலைகள் 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன. அரசின் மானிய ரத்தை தொடர்ந்து சென்ட்ரல் மார்க்கெட் இறைச்சி வியாபாரிகள் கடைகளை அடைத்து அரசுக்கு தங்களின் எதிர்ப்பை அமைதியான முறையில் உணர்த்தினர்.

பஹ்ரைன் அரசு பல்வேறு மானியங்களையும் ரத்து செய்வதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 200 மில்லியன் டாலர்கள் மிச்சமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேவேளை இறைச்சி விலை உயர்வால் பாதிக்கப்படும் பஹ்ரைனிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரிடையாக அரசு செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளதை காரணம் காட்டி இந்த மானிய ரத்துகள் செய்யப்பட்டாலும் '11வது உலக வர்த்தக ஒப்பந்தம்' என்ற பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவால் திணிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் இனி இதுபோல் தான் அனைத்து மக்கள் நல மானியங்களும் ரத்து செய்யப்படும். பஹ்ரைனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

https://www.wto.org/english/thewto_e/minist_e/mc11_e/mc11_plenary_e.htm

இந்தியாவின் சார்பில் நிர்மலா சீதாராமன் என்கிற மத்திய அமைச்சர் கையெழுத்திட்டு வந்ததை மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் வெளிப்படுத்தி படிப்படியாக இந்தியாவிலும் மானியங்கள் ரத்து செய்யப்பட்டு ரேசன் கடைகள் இழுத்து மூடப்படும் என எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பயனாளிகளுக்கு வங்கியில் நேரடியாக மானியம் போடப்படும் என்ற இந்தியாவின் நடைமுறையையே பஹ்ரைனும் சொல்லியிருப்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

http://tamilsnow.com/?p=113778

Source: Emirates 247, Arab News etc...
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.