அதிராம்பட்டினம், அக்.20
அதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட செக்கடி மேடு ~ வாய்கால் தெரு ~ ஆலடித்தெரு ~ சேர்மன் வாடி ஆகிய 4 வழிப் பகுதிகளை கடக்க உதவும் வாய்க்கால் தெரு கடைசி இணைப்புச் சாலையில், எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. சாலையின் வளைவுகளில் குடியிருப்பு வீடுகள் உள்ளதால், அப்பகுதிகளில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாமல் அடிக்கடி வாகன விபத்து நிகழும்.
இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 35). அதிரையில் தங்கியிருந்து கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று சனிக்கிழமை காலை பணிக்காக சேர்மன் வாடியிலிருந்து செக்கடிமேடு பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, வாய்க்கால் தெரு சாலையில் வந்த இருசக்கர பால்வண்டி வாகனம் ஒன்று வளைவில் திரும்பும் போது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாக்கியராஜுக்கு உடலில் காயம் ஏற்பட்டு, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியது;
குடியிருப்புகள் அதிகம் நிறைந்த இப்பகுதி வளைவுகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தவிர்க்கவும், வாகன வேகத்தை கட்டுப்படுத்தவும், சாலைகளின் வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்' என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.