.

Pages

Tuesday, October 23, 2018

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரசாரம் (படங்கள்)

பேராவூரணி அக்.23-
ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடவும், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும், மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பேராவூரணி அஞ்சல் நிலையம் முதல் பேருந்து நிலையம் வரை குடைப் பரப்புரை இயக்கம் திங்களன்று மாலை நடந்தது.

பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்டோர், ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய குடைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு பரப்புரை செய்தனர்.

நிகழ்ச்சிக்கு, தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தங்க குமரவேல், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் அனல் ச.ரவீந்திரன், கே.பி.முருகானந்தம், தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினர்கள் விடுதலை மறவன், கவிமுருகன், கோபி, அமல்ராஜ், பிரகாசம், தங்க பழனிவேல், தங்கசாமி, கேவி முத்தையா, ஆனந்தராஜ், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.