.

Pages

Monday, October 29, 2018

அதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இரங்கல்!

ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா 
அதிராம்பட்டினம், அக்.29
எஸ்டிபிஐ கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா (வயது 85). இன்று திங்கட்கிழமை அதிகாலை அவரது சிஎம்பி லேன் இல்லத்தில் (வஃபாத்) காலமானார்.

நெல்லை முபாரக் 
இதையொட்டி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பது:
'SDPI கட்சியின் துவக்க காலத்தில் தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் பேரூராட்சியின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவராக இருந்த ஆற்றல் மிகுந்த கட்சியின் செயல்வீரர் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா (வயது 85) அவர்கள் நேற்று இரவு இவ்வுலகைவிட்டு மறைந்த செய்தி அறிந்தேன். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பானதாக அமைய நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

சகோ. ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா அவர்களின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.