.

Pages

Monday, October 29, 2018

இந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்தது (படங்கள்)

அதிரை நியூஸ்: அக். 29
இன்று (29.10.2018) காலை இந்தோனேஷிய நேரம் 6.20 மணியளவில் 189 பேருடன் புறப்பட்ட லயன் ஏர் (Lion Air) எனும் விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் அனைவரும் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து பங்க்கல் பினாங் (Pangkal Pinang) எனும் தீவிற்கு 181 பயணிகள் 8 விமான ஊழியர்கள் என 189 பேர் விமானத்தில் இருந்தனர். கடலில் விழுந்து நொருங்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் மிதக்கின்றன. யரேனும் உயருடன் உள்ளார்களா என மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.

சுனாமி, எரிமலை வெடிப்பு, மழை வெள்ளம் என தொடர்ந்து துயரங்களை சந்தித்து வரும் இந்தோனேஷிய மக்களை இந்த விமான விபத்து மேலும் கவலையுறச் செய்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விமான விபத்தில் இதே லயன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடலுக்குள் இறங்கியது எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேபோல் 2014 ஆம் ஆண்டு ஏர் ஏசியா விமானம் ஒன்றும் சுரபாயா நகரிலிருந்து சிங்கப்பூர் சென்ற போது கடலின் மீது விழுந்து நொறுங்கியதில் 162 பேர் உயிரிழந்திருந்தனர்.

Source: Gulf News / Khaleej Times etc...
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.