அதிரை நியூஸ்: அக். 27
சவுதி அரேபியத் தலைநகர் ரியாத் மாநகரில் நடைபெற்ற 'எதிர்கால முதலீடுகளுக்கான முன்முயற்சி' (Future Investment Initiative - FII) என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சவுதி அரசின் பல்வேறு துறைகள் பல்வேறு வடிவுகளில் தனியார்மயமாக்கப்படவுள்ளதாக சவுதி பொருளாதாரத் துறைக்கான அமைச்சர் முஹமது அல் துவைஜிரி தெரிவித்தார்.
சவுதியின் பெட்ரோலிய நிறுவனமான அராம்கோவின் சில பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் சுமார் 100 பில்லியன் டாலர்கள் திரட்டுவது மற்றும் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு பல்வேறு வடிவுகளில் விற்பதன் மூலம் சுமார் 200 பில்லியன் டாலர்கள் திரட்டுவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆரம்பமாக, சவுதி அரசின் கீழ் நேரடியாக செயல்படும் 4 துறைகளான உணவுக்கிடங்குகள் மற்றும் தானியங்கள் சேமிப்பு (Silos and grains), பள்ளிக்கூடங்கள் (Schools), சுகாதார மையங்கள் (Health care) மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு (Desalination) போன்றவை தனியார்மயப்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவை அப்படியே கைமாற்றிவிடப்படாமல் ஒவ்வொரு துறைக்கும் ஏற்றவாறு பொருந்தும் வௌ;வேறு நடைமுறைத்திட்டங்களுடன் தரப்படும் எனவும் தெரிவித்தார்.
அதாவது, ஒரு சில துறைகள் சரிபாபதியாக அரசின் கைகளிலும் மீதம் தனியாரின் கைகளிலும் இருப்பது, சில துறைகள் முழுமையாகவே தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற பல்வேறு வடிவிலான நடைமுறைகள் இத்தனியார்மயத்தின் போது கடைபிடிக்கப்படும் என விளக்கினார். (For example, is partly government-owned, and partly owned by private shareholders) மேலும் பல துறைகளை தனியார்மயப்படுத்திட ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.