.

Pages

Friday, October 19, 2018

அதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.19
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழுக்  கூட்டம் அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர்கள் கோவை. ரஹ்மத்துல்லா, இ.பாருக், முஜீப் ரஹ்மான்  ஆகியோர் கலந்துகொண்டு, வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெரும் 'திருக்குர்ஆன் மாநாடு' தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும், அதிராம்பட்டினத்தில், எதிர்வரும் (26-10-2018) அன்று சனிக்கிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் இ. முகமது. மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோர் பங்கேற்கும் திருக்குர்ஆன் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்துவது, மாநாட்டையொட்டி, தெருமுனைக் கூட்டங்கள், ஆட்டோ வாகனப் பிரச்சாரம், பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் விநியோகம் உள்ளிட்ட பிராச்சாரப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

3 comments:

  1. அட பாவிகளா பணம் இருக்குனு இப்படியா.?
    ஆணவத்தின் உச்சம்..!

    பள்ளிக்குள் பல பலப்பான‌ மார்பில் கல்லில் சேர் போட்டு செயற்க்குழு நடத்தி பணத்தை வீன் விரையம் செய்யும் அதிரை TNTJ வினர்.

    ஏதோ ஒரு பலமொழி ஒன்னும் சொல்லுவாங்க சந்தணம் கூட இருந்தா என்கையோ பூசிப்பான அந்த கதையா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்துலில்லாஹ்

      *உறுப்பினர்களே இல்லாத லெட்டர் பேட் இயக்கங்கள்கூட ஊரில் வசூல் செய்து திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து மாவட்ட செயற்குழுவை நடத்தி வீண் விரயம் செய்யும் இந்தக் காலத்தில்*

      அல்லாஹ்வின் ஆலயத்திலேயே அதிலுள்ள வசதிகளை மட்டும் பயன்படுத்தி மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக நடந்து காட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டப்படவேண்டிய ஓர் இயக்கம் தான்

      ஆதரவு தெரிவிக்க வேண்டிய ஒரு நல்ல இயக்கம்தான்

      *மீண்டும் ஒரு முறை அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே*

      Delete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    *உறுப்பினர்களே இல்லாத லெட்டர் பேட் இயக்கங்கள்கூட ஊரில் வசூல் செய்து திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து மாவட்ட செயற்குழுவை நடத்தி வீண் விரயம் செய்யும் இந்தக் காலத்தில்*

    அல்லாஹ்வின் ஆலயத்திலேயே அதிலுள்ள வசதிகளை மட்டும் பயன்படுத்தி மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக நடந்து காட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டப்படவேண்டிய ஓர் இயக்கம் தான்

    ஆதரவு தெரிவிக்க வேண்டிய ஒரு நல்ல இயக்கம்தான்

    *மீண்டும் ஒரு முறை அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே*

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.