.

Pages

Wednesday, October 31, 2018

வாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூ.55 ஆயிரம் நிதி உதவி!

அதிராம்பட்டினம், அக்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் ரஹ்மான். ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த அக்.24 ந் தேதி மனைவி ஆய்ஷா (வயது 23), தனது 8 வயது பெண் குழந்தை ஆகியோருடன் ஆட்டோ வாகனத்தில் அதிரையிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மணமேல்குடி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆயிஷாவின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரால், தனது மனைவியின் கால் ஆப்ரேஷன் ~ தொடர் சிகிச்சை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத நிலையில் பெண்ணின் குடும்பத்தார் நம்மிடையே உதவியை கோரி இருந்தனர்.

இந்நிலையில், அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ஏற்பாட்டின் பேரில், ரியாத் வாழ் அதிரை சகோதரர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் ரூ.5 ஆயிரம், ஆகக் கூடுதல் ரூ. 55 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை, பெண்ணின் குடும்பத்தாரிடம் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அருகில், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மருத்துவ நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட பெண்ணின் குடும்பத்தார் கொடையளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

1 comment:

  1. பைத்துல்மால் நிர்வாகிகள், மற்றும் ரியாத் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி கலந்த துவாவை ஒவ்வொரு இஸ்லாமியனும் செய்யவேண்டும்

    யா அல்லாஹ் அதிரை பைத்துல்மால் கியாமத் நாள்வரை நீடித்து அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய உதவிசெய்வாயாக ஆமின்.

    வாழ்த்துக்களுடன்,சாகுல்ஹமிது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.