.

Pages

Sunday, October 28, 2018

அமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு முடிவதை தொடர்ந்து அரசு எச்சரிக்கை!

அதிரை நியூஸ்: அக்.28
அமீரகத்தில் அக். 31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு முடிவதை தொடர்ந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கிய 3 மாத பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைவதை தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு பிடிபடுபவர்கள் கடும் அபராதம், சிறை மற்றும் நாடு கடத்தல் போன்ற தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்றும் அதேபோல் சட்டத்திற்கு புறம்பான தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 'உங்களுடைய வாழ்விட அனுமதி நிலையை சட்டப்பூர்வமாக மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது நாட்டை விட்டு அபராதமின்றி வெளியேறிவிடுங்கள்' என்ற வாய்ப்பை அமீரக அரசு வழங்கியிருந்தது எதிர்வரும் 31.10.2018 புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

மேலும் முறையாக தங்களுடைய வாழ்விட நிலையயை (residency status) மாற்றிக் கொண்டு தொடர்ந்து அமீரகத்தில் புதிய வேலைவாய்ப்புக்களை தேட விரும்புபவர்களுக்கு 6 மாத தற்காலிக வாழ்விட விசாவும் ஒரு சலுகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தகைய விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆமர் மற்றும் தஃசீல் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Those who sought to rectify their status to remain in the UAE and look for jobs after being granted a six-month temporary residence visa have also been dealt with by the Amer and Tasheel centres across the country.

பொதுமன்னிப்புதாரர்களுக்காக அமீரகம் முழுவதும் 9 இமிக்கிரேசன் மையங்கள் (GDRFA) திறக்கப்பட்டு தேவையான உதவிகளை வழங்கிவருகின்றன. இந்த பொதுமன்னிப்புக்கான சிறப்பு மையங்கள் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை வாரந்தோறும் ஞாயிறு முதல் வியாழன் வரை இயங்கி வருகின்றது.

Amnesty-seekers are received and registered at the nine service centres of the General Directorate of Residency and Foreign Affairs across the UAE.

The amnesty registration service centres operate from 8am to 8pm Sunday to Thursday.

உஷார்! பொது மன்னிப்பு வாய்ப்பு இன்னும் 3 தினங்களில் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. விரைந்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

அதிரை நியூஸில் வெளியான இது தொடர்பில் உதவும் பதிவையும் வாசிக்கவும்:

அமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERSTAY தாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்!

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.