.

Pages

Monday, October 29, 2018

சைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

தஞ்சாவூர் அக்.30-
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில சாலையோர மிதிவண்டி (Road Cycling)  போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக் 27 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர், கும்பகோணம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகள் இணைந்த, தஞ்சாவூர் மண்டல அளவிலான சாலை மிதிவண்டி போட்டி கும்பகோணத்தில் நடைபெற்றது.

இதில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன் எஸ்.நந்துலால் மென்மேலோர் பிரிவில் இரண்டாம் இடமும், 9 ஆம் வகுப்பு மாணவன் எஸ்.அஜய் இளையோர் பிரிவில் முதலிடமும் பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள  சாலையோர  மிதிவண்டி போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் அ.கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்     வி.ஏ.டி.சுந்தரராஜன், பொருளாளர் ஆர்.பி.இராசேந்திரன், பெற்றோர் துணைத்தலைவர்கள்  எம்.சுந்தர்ராஜன், ஏ.தெட்சிணாமூர்த்தி, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சி.குமாரவேலு, உடற்கல்வி இயக்குநர் சி.ராஜ்குமார், மா.சோலை, ச.முத்துராமலிங்கம், பள்ளிஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் வெற்றிகள் தொடர பாராட்டி பரிசளித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.