அதிரை நியூஸ்: அக்.30
அமீரக பொதுமன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பன்னாட்டு தூதரக அதிகாரிகள் நம்பிக்கை
அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் நாளை அக்டோபர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் பல நாட்டு தூதரகங்களும் பொது மன்னிப்புக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டுகோள் விடுத்திருப்பதால் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக இமிக்கிரேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றபோதிலும் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டால் மட்டுமே மேற்கொண்டு கருத்துக்கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதரகம் சார்பாக பொது மன்னிப்பு காலம் துவங்கியது முதல் அபுதாபியிலுள்ள இந்திய தூதரகம் சார்பில் 656 எமர்ஜென்ஸி சர்ட்டிபிகெட்டுகளும் 275 குறைந்த காலம் மட்டுமே செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், துபையிலுள்ள துணைத் தூதரகம் சார்பில் 3,332 எக்ஸிட் பாஸ்களும், 1,638 குறுகிய கால பாஸ்போர்ட்டுகளும், வசதியற்ற தொழிலாளர்களுக்கு 275 இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தூதரகம் இதுவரை 12,000 மேற்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெற்று சுமார் 8,000 பாஸ்போர்ட்டுகளை விநியொகித்துள்ள நிலையில் இன்னும் சுமார் 4,500 பாஸ்போர்ட்டுகள் டாக்காவிலிருந்து வரவேண்டியுள்ளதால் தூதரக அதிகாரி அதிகாரபூர்வமாகவே பங்களாதேஷ் சார்பாக பொதுமன்னிப்பை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமீரக இமிக்கிரேசன் துறை பொதுமன்னிப்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சுமார் 25,000 புதிய விசாக்களை புதிய ஸ்பான்சரின் கீழ் வழங்கியுள்ளதுடன் சுமார் 2,900 ரெஸிடென்ஸி விசாக்களை புதுப்பித்து தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், துபையிலுள்ள அமீரக இமிக்கிரேசன் துறை அலுவலகம் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பொதுமன்னிப்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சுமார் 25,000 புதிய விசாக்களை புதிய ஸ்பான்சரின் கீழ் வழங்கியுள்ளதுடன் சுமார் 2,900 ரெஸிடென்ஸி விசாக்களை புதுப்பித்து தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத கணக்குகள் வெளியிடப்படவில்லை.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.