.

Pages

Saturday, October 20, 2018

அரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து விவசாயப் பண்ணை (வீடியோ)

 
அதிரை நியூஸ்: அக்.20
அரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் தான் செங்குத்தான நிலையில் விவசாயப் பண்ணை அமைந்துள்ளது.

தரையில் சுமார் 4 முதல் 6 ஏக்கர் வரையிலான நிலத்தில் செய்யப்படும் விவசாயப் பொருட்களை இந்த செங்குத்து விவசாய தொழிற்நுட்ப முறையில் 1 ஏக்கர் இடத்திலேயே வளர்த்து அறுவடை செய்து கொள்ளலாம். துபையின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகில் துபையின் முதலாவது செங்குத்து விவசாய பண்ணை அமைந்துள்ளது.துபையில் மேலும் 3 இடங்களில் செங்குத்து விவசாய பண்ணை (Vertical Agricultural Farms).

ஆண்டு முழுவதும் தினமும் சுமார் 2,700 கிலோ விவசாயப் பொருட்களை அறுவடை செய்து கொள்ளலாம். இந்த முறை விவசாயத்திற்கு நடைமுறை விவசாய முறையிலிருந்து 90 சதவிகிதம் தண்ணீரை சேமித்துக் கொள்ளலாம். மருந்து மற்றும் பூச்சி கொல்லிகள் பயன்படுத்துவதில்லை. இது சுற்றுச்சூழல் மாசிலிலிருந்து பெருமளவு பாதுகாக்கப்படுகிறது.

பல அடுக்குமுறையில் சதுரவடிவ தட்டுக்களில் வைத்து வளர்க்கப்படும் இந்த விவசாயப் பொருட்கள் உடனுக்கு ஃபிரஷ்ஷாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் கேட்டரிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், அல் பதியா விவசாய பண்ணை ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன. இவர்களுக்காக இத்திட்டதை கட்டமைத்து செயல்படுத்தி வருவது அமெரிக்காவைச் சேர்ந்த Crop One என்ற நிறுவனமாகும்.

பாலைவனப் பிரதேசமான துபையே தனது வருங்கால உணவு பாதுகாப்பு பற்றி சிந்திக்கும் நிலையில், விவசாய நாடுகளாக அறியப்பட்ட பலவற்றின் விவசாய நிலங்களும், பாசனத்திற்கான தண்ணீரும், விவசாயிகளும் ஏதோவொரு திட்டமிட்ட சர்வதேச சூழ்ச்சியின் மூலம் அருகிவரும் நிலையில் இத்தகைய மாற்றுத் திட்டங்களையும் உலக விவசாய நாடுகள் பரிசீலிக்க வேண்டும்.

Source: Dubaipost
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.