2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தொழில் முதலீடு ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தொழில் முனைவோர்கள் மற்றும் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது :-
எதிர்வரும் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளையும், நடைமுறைகளையும் வழங்கும் பணி மாவட்ட தொழில் மையம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, கயிறு வாரியம், மருத்துவ துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகி விவரங்களை பெற்று பயன் பெறலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், திட்ட மேலாளர் ரவிச்சந்திரன், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், தொழில் தொடங்குவதற்கான தடையில்லா சான்று வழங்கும் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.