.

Pages

Saturday, October 27, 2018

சவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பிரித்தெடுப்பு!

அதிரை நியூஸ்: அக்.27
சவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்

சவுதியில் ஒட்டிப்பிறந்த 4 மாத இரட்டை பெண் குழந்தைகளான ஷேக்கா மற்றும் ஷூமூக் (Sheikha & Shumukh) ஆகியோர்களை பிரித்தெடுப்பதற்கான ஆபரேசன் ரியாத் நகரில் கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டியில் உள்ள கிங் அப்துல்லாஹ் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 12 மணிநேரம் 8 கட்டங்களாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தைகள் இருவரும் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர தொடர் கண்காணிப்பிற்குப் பின் குழந்தைகள் இருவரும் முதன் முதலாக தனித்தனி படுக்கைகளில் படுக்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடல் உறுப்புக்களும் சீராக இயங்குகின்றது என மருத்துவமனை தெரிவித்துள்ளது..

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.