குர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்படும்.
அதன்படி, அரபி மொழி பாடப்பிரிவில், குர்ஆன் ஜூஸ் மனனப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள் எம்.ஒய் முத்தஸ்ஸிர், எம்.என். சாதிர் அகமது, ஜி. முகமது தவ்பீக், எஸ்.முகமது, எஸ்.ஹவாஸ், ஏ.ஜபீர், எஸ். முகமது ஜமீல் ஆகியோருக்கு இன்று (அக்.25) வியாழக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இறைவணக்கக் கூட்டத்தில், நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், மாணவன் எம்.ஒய் முத்தஸ்ஸிர் வகுப்பு தொடங்கிய குறுகிய நாட்களில் குர்ஆன் ஒரு ஜூஸ் மனனப்போட்டியில் வெற்றி பெற்றதற்கான சிறப்பு பரிசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்திற்கு, பள்ளி இணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மீனாகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சி.எம்.பி லேன் இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி போட்டி நடுவராக இருந்து அறிமுக உரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில், டெங்கு மற்றும் மழை காலங்களில் பரவும் தொற்றுநோய் தடுப்பு குறித்து, அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தன், பள்ளி மாணவர் ஷக்கீல் அகமது ஆகியோர் விழிப்புணர்வு பிரசார உரையை நிகழ்த்தினர். மேலும், உடல் நலத்தை பேணும் வகையில் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில், ஹாஜி எம்.எஸ் முகமது அலி, ஹாஜி ஜமால், பெற்றோர் ஆசிரியர் கழக இணைச்செயலாளர் எம்.எப் முகமது சலீம், ஏ.கே சாகுல் ஹமீது, ஜாஹிர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முடிவில், குர்ஆன் மனனப்பிரிவு பயிற்றுநர் ஹாபிஸ் அபூபக்கர் நன்றி கூறினார்.
அல்ஹம்து லில்லாஹ்..
ReplyDelete