.

Pages

Wednesday, October 17, 2018

அமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத்துச் செல்லப்பட்டார்!

அதிரை நியூஸ்: அக்.17
அமீரகம், ராஸ் அல் கைமா மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத்துச் செல்லப்பட்டார்

அமீரகத்தில் பருவகால மாற்றம் துவங்கியுள்ளதை அடுத்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. நேற்று பெய்த மழையில் ராஸ் அல் கைமா எமிரேட்டின் 'வாதி கொர்' (Wadi Qor) எனப்படும் பள்ளத்தாக்கில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் அவரது வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவரை கண்டுபிடித்து மீட்கும் முயற்சியில் ராஸ் அல் கைமா போலீஸாருடன் துபை போலீஸாரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

முன்னதாக இதே மழை வெள்ளத்தில் சிக்கிய மேலும் 2 வாகனங்களையும் அதன் ஓட்டுனர்களையும் துபை போலீஸார் வெற்றிகரமாக மீட்டனர்.

அதேபோல் புஜைரா நோக்கிச் செல்லும் பிரசித்திபெற்ற ஷார்ஜா – கல்பா நெடுஞ்சாலையும் 'வாதி அல் ஹீலோ' (Wadi Al Hilo) எனும் பள்ளத்தாக்கு பகுதியின் இருபுறமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தை ஷார்ஜா போலீஸார் தடை செய்துள்ளனர்..

மேலும், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்குமாறு டிரக் மற்றும் இதர வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளதுடன் பார்வைகளை பாதிக்கும் மங்கலான சீதோஷ்ண நிலைகளின் போது வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும் ஷார்ஜா போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.