.

Pages

Monday, October 22, 2018

குவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்டும் நிரப்ப முடிவு!

அதிரை நியூஸ்: அக். 22
குவைத்தில் அரசுத்துறை வேலைகள் விரைவில் 100% குவைத்தியர்களால் நிரப்பப்படும்

குவைத் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளபடி, விரைவில் குவைத் அரசுத்துறை வேலைகள் அனைத்தும் 100% குவைத்தியர்களால் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது.

அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் வெளிநாட்டவர்கள் படிப்படியாக நீக்கப்பட்டு அந்த இடங்களில் குவைத்தியர்களை நியமிக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி ஜரூராக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமது அல் தல்லால் சமீபகாலங்களில் குவைத்தில் எகிப்தியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியதை அடுத்து அது குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.