.

Pages

Sunday, October 21, 2018

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜின் மற்றும் ரொட்டவேட்டர் கருவி பெற...

பட்டுக்கோட்டை, அக்.21
மானியத்தில் ஆயில் என்ஜின் மற்றும் ரொட்டவேட்டர் கருவி ஆகியவற்றைப் பெற பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் (பொ) எஸ். சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதற்காக 2018-2019 ஆம் ஆண்டு குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 50 ஆயில் என்ஜின்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேளாண்மை பொறியியல் துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து 5 எச்பி முதல் 8 எச்பி திறன் கொண்ட ஆயில் என்ஜின் ஒன்றுக்கு ரூ.15,000 அல்லது 50 சதவீத மானியம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.

இதைப்போல, வேளாண்மை பொறியியல் துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து மானிய விலையில் ரொட்டவேட்டர் கருவியைப் பெறலாம். ரொட்டவேட்டர் ஒன்றுக்கு ரூ.45,000 அல்லது 50 சதவீத மானியம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.

இவற்றைப் பெற விவசாயிகள் உழவன் செயலியில் தங்கள் பெயரை முன்னுரிமையில் பதிவு செய்து, தங்கள் நிலத்திற்கான சிட்டா, அடங்கல், தங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி விவரங்களைப் பெறலாம்.

மேலும், இதற்கான முழுத்தொகையை வங்கி வரைவோலையாக செலுத்திய பின்னரே, வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படும். அதன்பின் மானியத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

எனவே, பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் உடனே தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04373-235037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.