.

Pages

Tuesday, October 23, 2018

துபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நடமாடும் மின்சார ரீ-சார்ஜிங் ஸ்டேஷன் அறிமுகம்!

அதிரை நியூஸ்: அக்.23
துபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நடமாடும் மின்சார ரீ;-சார்ஜிங் ஸ்டேஷன் அறிமுகம்

துபையில் சுற்றுச்சூழலை பாதிக்காத எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக துபை போக்குவரத்து துறை (RTA) பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்த எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்காக துபையின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 13 எலக்ட்ரிக் சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக நடமாடும் வாகனங்களில் எலக்ட்ரிக் கார் சார்ஜ் மையங்கள் அறிமுகமாகின்றன.

மின்சார கார்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படும் போது இந்த வாகனங்களை அழைத்து ஓரளவு ரீ-சார்ஜ் செய்து கொண்டு அருகாமையிலுள்ள ரீ-சார்ஜ் மையங்களுக்குச் சென்று முழுமையாக வாகனங்களை ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம்.

துபை போக்குவரத்து துறையின் ஓர் அங்கமான துபை டேக்ஸி கார்ப்பரேசன் (DTC) தனது டேக்ஸி பிரிவில் 200 டெஸ்லா மின்சார கார்களை இணைக்கவுள்ளது. முதற்கட்டமாக 50 கார்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 75 எலக்ட்ரிக் டேக்ஸிக்கள் இந்த வருட இறுதிக்குள் இணையவுள்ளன, எஞ்சிய 75 கார்கள் 2019 ஆம் ஆண்டில் இணையும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.