அதிராம்பட்டினம், அக். 22
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கிளை சார்பில், கல்லூரி வாயில் முன்பாக முழக்கப்போராட்டம் இன்று (அக்.22) திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
முழக்கப்போராட்டத்திற்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்க அதிராம்பட்டினம் தலைவர் பேராசிரியர் டி.லெனின் தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெ.சொக்கலிங்கம், பொருளாளர் பேராசிரியர் எம். பிரேம் நவாஸ், துணைத்தலைவர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், இணைச்செயலாளர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறைகள் 2018 ன் படி, அனைவருக்கும் முழு பணப் பயனுடன் பணிமேம்பாடு வழங்க வேண்டும், பி.எச்டி, எம்.பில் தகுதிக்கான ஊக்க ஊதிய ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும், புத்தாக்க / புத்தொளிப் பயிற்சி விலக்கு ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.