.

Pages

Thursday, October 25, 2018

சவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பிரிக்க இன்று அறுவை சிகிச்சை!

அதிரை நியூஸ்: அக். 25
சவுதியில் ஒட்டிப் பிறந்த சியாமிஸ் இரட்டை பெண் குழந்தைகளான (Siamese Twins) ஷேக்கா (Sheikha & Shumukh) மற்றும் ஷூமூக் ஆகியோரை தனித்தனியே பிரித்தெடுப்பதற்கான சிகிச்சை இன்று ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டியில் அமைந்துள்ள கிங் அப்துல்லாஹ் ஸ்பெஷலிஸ்ட் சில்ரன் ஹாஸ்பிட்டலில் நடைபெறவுள்ளது. இந்த சிகிச்சை 8 கட்டங்களாக சுமார் 12 மணிநேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் இந்த இலவச சிகிச்சையை மருத்துவர்கள், ஸ்பெஷலிஸ்ட்டுகள், நிபுணர்கள், மருத்துவ உதவியாளர் அடங்கிய 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர். இதற்கு முன் 3 கண்டங்களின் 21 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 45 சியாமிஸ் இரட்டையர்கள் இந்த மருத்துவமனையில் பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஆபரேசன் 46 ஆவது ஆபரேசனாகும்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.